/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.65.50 கோடியில் சாலை பணிக்கு பூஜை
/
ரூ.65.50 கோடியில் சாலை பணிக்கு பூஜை
ADDED : பிப் 21, 2026 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: ஈரோடு முதல் பெருந்துறை வழியாக காங்கேயம் வரையிலான இரு வழிச்சாலையை, நான்கு வழி சாலையாக, 65.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, பெருந்துறையில் நேற்று பூஜை நடந்தது. கலெக்டர் கந்தசாமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இத்திட்டம் மூலம், ஈரோடு முதல் பெருந்துறை வழியாக காங்கேயம் வரை உள்ள இரு வழிச்சாலை, நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படும். பாலம் அகலப்படுத்துதல், சிறு பாலம் கட்டுதல், ஏற்கனவே உள்ள சிறு பாலங்களை அகலப்படுத்துதல், பஸ் நிறுத்தம் அமைத்தல், சாலை சந்திப்பு மேம்பாடு செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்..

