ADDED : செப் 24, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜா, இணை செயலாளர் மகேந்திரன், கோட்ட செயலாளர் பாபு, அரசு ஊழியர் சங்கம் விஜயமனோகரன் பேசினர்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தோரின் குடும்பத்தில் இருந்து கருணை அடிப்படையில் பணி
நியமனம் வழங்க வேண்டும். நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும். சீருடை, சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.