ADDED : நவ 13, 2026 06:13 AM

ஈரோடு:தமிழ்நாடு
நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு
மூலப்பாளையத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர்
அலுவலகம் முன், கோட்ட தலைவர் முருகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலம் குறித்த
சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்த
மனுவை அரசு திரும்ப பெற்று, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிட
வேண்டும்.
சாலை பணியாளர்களில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தில்
இருந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கேட்டு, விண்ணப்பம்
செய்து காத்திருக்கும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். சாலை
பணியாளர்களுக்கு ஊதியத்தில், 10 சதவீத ஆபத்துப்படி, சீருடை,
சலவைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
நிர்வாகிகள் ஜாகீர் உசேன், ராஜா, கதிரவன், முருகன்,
மணிகண்டன், மயில்சாமி, செந்தில்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைவரும் கண்ணில் கருப்பு துணி கட்டி, தராசை கைகளில் பிடித்தபடி
பங்கேற்றனர்.
