ADDED : அக் 27, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பணியாளர்
போராட்டம் நீடிப்பு
தாராபுரம், அக். 27-
தாராபுரத்தில் நடந்து வரும் சாலை பணியாளர் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் நீடித்தது. இரண்டாம் நிலை ஆய்வாளர் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை பணியாளர்கள், கடந்த, 22ம் தேதி முதல், தாராபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாத நிலையில், ஐந்தாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.