/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.177 கோடி மதிப்பில் சாலைப்பணி தொடக்கம்
/
ரூ.177 கோடி மதிப்பில் சாலைப்பணி தொடக்கம்
ADDED : டிச 03, 2025 07:48 AM

காங்கேயம்:காங்கேயத்தை
அடுத்த ஊதியூரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 132 கோடி ரூபாய்
மதிப்பில், ஈரோடு - தாராபுரம் ரோடு, நத்தக்காடையூர் முதல் குண்டடம்
பிரிவு வரை, 18.30 கி.மீ., துாரம் நடக்கிறது.
இதேபோல், 45 கோடி ரூபாய்
மதிப்பில், ஈரோடு-தாராபுரம் ரோடு குண்டடம் பிரிவு முதல்
வரப்பாளையம்வரை, 6 கி.மீ., துாரத்துக்கு இரண்டு வழிச்சாலை நான்கு
வழிச்சாலையாக மாற்றும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி
செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி
நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் நெடுஞ்சாலை துறை உதவி
கோட்ட பொறியாளர் வடிவேல்குமரன், உதவி பொறியாளர் ரஞ்சித் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

