/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலில் 2ம் முறையாக கொள்ளையர் கைவரிசை
/
கோவிலில் 2ம் முறையாக கொள்ளையர் கைவரிசை
ADDED : பிப் 13, 2026 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்
புளியம்பட்டி அருகே தாசம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது.
நேற்று காலை கோவிலின் கதவு திறந்து கிடந்தது. கோவில் முன்
வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதி
மக்கள் தகவலின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் சென்றனர்.
அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கத்தாலி திருட்டு போனது தெரிய
வந்தது. சில மாதங்களுக்கு முன் இதே கோவிலில் உண்டியல்
உடைக்கப்பட்டு பணம், 10க்கும் மேற்பட்ட குத்து விளக்குகள் திருட்டு
போனது. இந்நிலையில் மீண்டும் திருட்டு நடந்துள்ளது.

