ADDED : ஏப் 06, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே மொபைல் கடை
வைத்திருப்பவர் மயில்சாமி, 41; நேற்று காலை கடையை திறந்து உள்ளே
சென்றார்.
மேற்கூரை சிமெண்ட் ஷீட் உடைக்கப்பட்டு இருந்தது. கடையில்
பொருட்கள் கலைந்து கிடந்தன. கடையில் வைத்திருந்த, 1.25 லட்சம் ரூபாய், 4
மொபைல் போன், 5 புளூ டூத்கள் திருட்டு போனது தெரிந்தது. இவரது கடைக்கு
அருகே குமார் என்பவரின் மளிகை கடையிலும், மேற்கூரையை உடைத்து, 1.30
லட்சம் ரூபாய் திருட்டு போயுள்ளது. இருவரும் அளித்த புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.
மொபைல்போன் கடையில் இருவர் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.
அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
