ADDED : நவ 12, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
கோபி:கோழியை மீட்க கிணற்றுக்குள் சிக்கிய முதியவரை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
கோபி
அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் கனகசபாபதி, 60, விவசாயி;
இவர் வளர்த்து வந்த கோழி ஒன்று, வீட்டின் அருகே இருந்த, 80 அடி ஆழமுள்ள
கிணற்றில் நேற்று காலை, 11:00 மணிக்கு பறந்து சென்று விழுந்தது. 40 அடி
தண்ணீருக்குள் சிக்கிய கோழியை மீட்க, கனகசபாபதி தனது
குடும்பத்தினர் உதவியுடன், கயிறு கொண்டு தானே கிணற்றுக்குள்
இறங்கினார். கோழியை பத்திரமாக மீட்ட கனகசபாபதி, கிணற்றை விட்டு
வெளியே வர முடியவில்லை. தகவலறிந்த கோபி தீயணைப்பு வீரர்கள், அரை மணி
நேரம் போராடி, 40 அடி தண்ணீரில் தத்தளித்த, கனகசபாபதியை, வலை
கொண்டு, உயிருடன் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இதனால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
