நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, நம்பியூர் அருகே குருமந்துாரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 62, விவசாயி; இவர் வளர்த்து வந்த பத்து சேவல் கடந்த ஆக., மாதம் திருட்டு போனது. அவர் புகாரின்படி நம்பியூர்
போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த செந்தில், 34, கோபி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மாஜிஸ்திரேட் ருத்ர வாசுகி, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

