ADDED : செப் 03, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:புதுக்கோட்டை
மாவட்டம், புலிவலம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவரும், தற்போது
சென்னிமலை, மேலப்பாளையம் பெருமாள் கோவில் வீதியில் வசித்து
வருபவருமான இந்துக்குமார், 35, என்பவர் மீது சென்னிமலை போலீசில்
பல்வேறு வழக்கு உள்ளது.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்
வகையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரது
நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் அடைக்க போலீஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்
அடிப்படையில் ஈரோடு கலெக்டர் கந்தசாமி, கோவை சிறையில் உள்ள இந்துக்குமாரை
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சிறையில் உள்ள இந்துகுமாரிடம் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
