குப்பைக்கு தீ வைத்தது தொடர்பாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
குப்பைக்கு தீ வைத்தது தொடர்பாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
ADDED : ஜூலை 09, 2026 04:44 AM
பவானி:பவானி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. வார்டு பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை பவானி பழைய பஸ் ஸ்டாண்டு பின்புறம் கொட்டுகின்றனர்.
இரு நாட்களுக்கு முன், அந்த குப்பைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் பரவியால், அப்பகுதியினர் பாதிப்படைந்துள்ளனர். பவானி தீயணைப்புத்துறையினர் அந்த தீயை கட்டுப்படுத்தினர். இது சம்பந்தமாக பவானி நகராட்சி எஸ்.ஐ.,ஜெகதீஸ் கூறியதாவது:பவானி பழைய பஸ் ஸ்டாண்டில் பழைய பொருட்கள் எரித்து, புகைமூட்டம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதை நகராட்சி துாய்மை பணியாளர்கள் தான் செய்தார்கள் எனவும், தகவல் வெளியானது. நாங்கள் நேரடியாக களஆய்வு செய்த போது, இப்பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து பொருட்களை கொண்டு வந்து போட்டு, தீவைத்து எரித்துள்ளது தெரியவந்தது. அந்த நிறுவனத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். அந்த ரசீது சமூக வலைதளங்களில் வைரலானது.
