தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்டத்தில் ரூ.1.10 கோடி பறிமுதல்

மாவட்டத்தில் ரூ.1.10 கோடி பறிமுதல்

மாவட்டத்தில் ரூ.1.10 கோடி பறிமுதல்


ADDED : மார் 26, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சித்தோடு, கோணவாய்க்கால் பிரிவு என்ற இடத்தில் அறநிலையத்துறை ஆய்-வாளர் சசிகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்தனர்.

ஈரோடு வந்த டாடா ஏஸ் வாகனத்தில், 452 அரைக்கை சட்டை, 453 முழுக்கை சட்டை என, 905 எண்ணிக்-கையில் இருந்தன. இதன் மதிப்பு, 4 லட்சத்து, 52,550 ரூபா-யாகும். வாகனத்தை ஓட்டி வந்த பவானி ஊராட்சிகோட்டை பூபதி மகன் மோகனகுமாரிடம், உரிய ஆவணம் ஏதுமில்லா-ததால், அவற்றை பறிமுதல் செய்தனர்.* ஈரோடு மாவட்ட அளவில் நேற்று முன்தினம் வரை, 98 லட்-சத்து, 82,210 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர். நேற்று, 8 தொகுதியிலும் சேர்த்து, 11 லட்சத்து, 32,600 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுவரை மொத்தம், 1 கோடியே, 10 லட்-சத்து, 14,810 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் வழங்-கியதன் அடிப்படையில், 1 கோடியே, 5 லட்சத்து, 95,410 ரூபாயை விடுவித்தனர். மீதமுள்ள, 4 லட்சத்து, 19,400 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us