ADDED : மார் 27, 2026 05:14 AM

ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 1.10 கோடி ரூபாயை பறக்கும்
படையினர் பறிமுதல் செய்திருந்தனர். மாவட்டத்தில் நேற்று நடந்த
சோதனையில் பல்வேறு இடங்களில், 3.57 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இத்துடன்
சேர்த்து, 1 கோடியே, 13 லட்சத்து, 71,910 ரூபாய் பறிமுதல்
செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்களை காண்பித்ததால், 1 கோடியே, 10
லட்சத்து, 89,310 ரூபாயை திரும்ப ஒப்படைத்தனர். மீதி, 2 லட்சத்து,
82,600 ரூபாய் உள்ளது.
* பவானிசாகர் சட்டசபை தொகுதி பறக்கும் படை
அதிகாரிகள், சத்தி-கோவை சாலையில், புது ரோடு பகுதியில் நேற்று மாலை
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தியில் இருந்து கோவை
சென்ற அரசு பஸ்சில் சோதனை செய்தனர். வடக்குபேட்டையை சேர்ந்த குமார்,
உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த, 6.80 லட்சம் ரூபாயை பறிமுதல்
செய்தனர்.
