ADDED : மார் 28, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை தேர்தல் பறக்கும் படையினர், 1.13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்திருந்தனர். நேற்று பல்-வேறு பகுதிகளில் நடந்த சோதனையில், 10.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, 1 கோடியே, 24 லட்சத்து, 12,410 ரூபாயாக உயர்ந்தது. அதேசமயம் பறிமுதல் செய்ததில், 1 கோடியே, 12 லட்சத்து, 72,310 ரூபாயை, ஆவணங்கள் சமர்பித்ததன் அடிப்ப-டையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.* கோபி தொகுதி தேர்தல் பறக்கும்படை குழு-வினர், கோபி அருகே அரக்கன்கோட்டை பஸ் ஸ்டாப்பில், நேற்று மாலை வாகன சோத-னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த பொலீரோ பிக் அப் சரக்கு ஆட்டோவில், அந்தி-யூரை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி நாகராஜ், 19, வந்தார். உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 1.14 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
