ADDED : ஏப் 09, 2026 03:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் நேற்று முன்தினம் வரை, 1 கோடியே, 60 லட்சத்து, 81,460 ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர்.
நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில், 51,750 ரூபாய், ஈரோடு மேற்கில், 73,700 ரூபாய் என, 1 லட்சத்து, 25,450 ரூபாயை பறி-முதல் செய்திருந்தனர். மொத்தம், 1 கோடியே, 62 லட்சத்து, 6,910 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதில், 1 கோடியே, 60 லட்-சத்து, 65,210 ரூபாயை ஆவணங்கள் வழங்கியதன் அடிப்ப-டையில் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
