ADDED : மார் 22, 2026 07:16 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி-கொளத்துார் ரோட்டில்,
அந்தியூர்
தொகுதி தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கையில்
ஈடுபட்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்துாரை சேர்ந்த சென்னப்பன்,
50; மாடு விற்று, உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 80 ஆயிரம் ரூபாயை
பறிமுதல் செய்தனர். இதேபோல் பர்கூர் அருகே கர்கேகண்டிசெக்போஸ்டில்,
ஜெயராஜ் தலைமையிலான பறக்கும் படை-யினர் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்தியூரிலிருந்து தோஸ்த் வண்டியில் வந்த, கர்நாடக மாநிலத்தை
சேர்ந்த வெங்காய வியா-பாரி சக்திவேலிடம், 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல்
செய்தனர்.
