ADDED : மார் 31, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 1.32 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்திருந்தனர். நேற்று ஈரோடு மேற்கில், 1.76 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இதையும் சேர்த்து இதுவரை, 1 கோடியே 34 லட்சத்து, 18,010 ரூபாய் பறிமுதல் செய்து, உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 26 லட்சத்து, 39,910 ரூபாயை ஒப்படைத்தனர். மீதி, 7 லட்சத்து, 78,100 ரூபாய் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.* பவானி அருகே மூன்றுரோடு பகுதியில், பறக்கும் படையினர் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். மொபட்டில் வந்த சித்தாரை சேர்ந்த தினேஷ்குமாரிடம், 64,500 ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
