ADDED : மார் 19, 2026 04:39 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் வரை, 20.35 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்திருந்தனர்.
நேற்று முன்-தினம் இரவு முதல் நேற்று வரை ஈரோடு கிழக்கில், 90,000 ரூபாய், ஈரோடு மேற்கில், 2.45 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 1 லட்சம் ரூபாய், அந்தியூரில், 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 370 ரூபாய், கோபியில் இரு நபர்களிடம், 5 லட்சத்து, 93 ஆயிரத்து, 200 மற்றும், 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 150 ரூபாய், பவானிசா-கரில், 4 லட்சத்து, 73 ஆயிரத்து, 30 ரூபாய் என மாவட்ட அளவில், 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 930 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுவரை, 39 லட்சத்து, 81 ஆயிரத்து, 50 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை காண்பித்து, 34 லட்சத்து, 23 ஆயிரத்து, 130 ரூபாயை பெற்று சென்றனர். மீத-முள்ள, 5 லட்சத்து, 57 ஆயிரத்து, 920 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.மேலும், 10,752 ரூபாய் மதிப்பிலான, 16.02 லிட்டர் மதுபா-னங்களையும்
பறிமுதல் செய்துள்ளனர்.
