ADDED : ஏப் 03, 2026 03:46 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி,பவானிசாகர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், புன்செய் புளியம்பட்டி அடுத்த நல்லூர் அருகே கோவை நோக்கி சென்ற கர்நாடக அரசு பஸ்சில், பயணிகளிடம் நேற்று காலை சோதனை செய்தனர்.
இதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு உத்தரகள்ளியை சேர்ந்த மகேசா, 56 என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் இருந்தது. மோட்டார் பம்ப்செட் வாங்க கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாகரனிடம் ஒப்படைத்தனர்.
