ADDED : மார் 17, 2026 04:18 AM
காங்கேயம்: காங்கேயம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளகோ-வில்-முத்தூர் ரோடு வேலாயுதம்பாளையம் அருகே, முத்துார் செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ், வேனில் வந்தார். அவ-ரிடம் சோதனை செய்தபோது, 2.03 லட்சம் ரூபாய் வைத்தி-ருந்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்து, காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் பால-முருகனிடம் ஒப்படைத்தனர்.
ஆட்டோவில் சிக்கிய 1,000 சேலைதிருப்பூர் புள்ளியில் ஆய்வாளர் உஷாராணி தலைமையிலான, காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை குழுவினர், காங்கேயம்-ஈரோடு ரோடு முள்ளிபுரம் பில்டர்ஸ் கல்லுாரி முன், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து, தங்கமணி என்பவர் சரக்கு ஆட்டோவில் வந்தார். ஆட்டோவில், 1,000 காட்டன் சேலை, 300 துண்டு, 100 சால்வை இருந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லை.
அவற்றை பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் தங்கவே-லிடம் ஒப்படைந்தனர். ஒரு சேலை, 250 ரூபாய் இருக்கும். குடி-மங்கலம் கொண்டு செல்லப்பட்டு ஆளும் கட்சியினர் தரப்பில் வாக்காளர்களுக்கு, வழங்கப்பட இருந்ததாக தெரிகிறது.

