ADDED : மார் 24, 2026 05:43 AM
பெருந்துறை பெருந்துறை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், காஞ்சிக்கோவில், எல்லபாளையம் பிரிவு அருகில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு லாரியில் சோதனை செய்தனர். அதில் வந்த பெருந்துறை, பெரியவேட்டுவபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியிடம், ஒரு லட்சம் ரூபாய் இருந்தது. சொந்த உபயோகத்துக்கான பணம் என்று
கூறினார். ஆனாலும் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.இதேபோல் காஞ்சிக்கோவில், கவுந்தப்பாடி ரோட்டில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த தினேஷிடம், 52,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். கொடுத்த கடனை வசூலித்து திரும்புவதாக கூறினாலும், உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.
* சென்னிமலையை அடுத்த சிறுகளஞ்சி, சீரங்கம்பாளையம் பிரிவு அருகில், தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்., ஈஸ்வரமூர்த்தி காரில் வந்தார். அவரிடம், 89,500 ரூபாய் இருந்தது. தேங்காய் வியாபாரத்துக்கு கொண்டு செல்வதாக கூறினாலும், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை, பெருந்துறை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.
