தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 49 மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கடன்

49 மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கடன்

49 மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கடன்


ADDED : நவ 29, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான, மூன்றாவது சிறப்பு கல்விக்கடன் முகாம் நடந்தது. இதில் தகுதியான, 49 மாணவ, மாணவியருக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக்கடன் ஆணையை வழங்கி கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:

உயர்கல்வியில் கல்விக்கடன் வழங்குவதன் மூலம், அவர்களது வருங்காலம் உறுதி செய்யப்படுகிறது. கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வித்யாலட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்ய வலியுறுத்தினர்.

இதன்படி, 3 கல்விக்கடன் முகாம் நடத்தி இந்தாண்டு, 75 கோடி ரூபாய் வரை கல்விக்கடன் வழங்க திட்டமிட்டு, 1,300 மாணவர்களுக்கு, 98 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். இங்கு நடந்த முகாமில், 49 பேருக்கு,2.5 கோடி ரூபாய் கல்விக்கடனுக்கான ஒப்புகை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசினார். நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்தன், கனரா வங்கி வட்டார மேலாளர் பவித்திரன், மாவட்ட முன்னோடி வங்கி முதுநிலை மேலாளர் சாமிக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us