ADDED : ஏப் 18, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் நேற்று முன்தினம் வரை, 1.94 கோடி ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர். ஈரோடு கிழக்கில், 79,000 ரூபாய், ஈரோடு மேற்கில், 1.20 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 77,100 ரூபாய் என, 2 லட்சத்து, 76,100 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
இத்துடன் சேர்த்து, 1 கோடியே, 96 லட்சத்து, 98,870 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 85 லட்சத்து, 71,170 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப கொடுத்தனர்.
