ADDED : ஏப் 06, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மேற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், ஈரோடு அருகே
வேப்பம்பாளையத்தில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவை, தொண்டாமுத்துாரை சேர்ந்த பூண்டு வியாபாரி கார்த்திக்,
36, தோஸ்த் வாகனத்தில் வந்தார். சோதனை செய்ததில் அவரிடம், 4.11 லட்சம்
ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து,
ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் நேற்று
ஈரோடு மேற்கு தொகுதியில், ஒரு லட்சம் ரூபாய், பவானியில், ஒரு லட்சம்
ரூபாய் என, 2 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
