ADDED : மார் 26, 2026 01:13 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி அருகே வாகன சோதனையில், தேர்தல் பறக்கும்படை குழுவினர், 53 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கோபி அருகே கவுண்டம்பாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும் படை குழுவினர், நேற்று காலை 7:55 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த, 407 வேன் வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது, சத்தியமங்கலத்தை சேர்ந்த மாதன், 45, என்ற டிரைவர், உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 53 ஆயிரத்தை 600 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
