ADDED : ஏப் 13, 2026 03:20 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையால் நேற்று முன்தினம் வரை, 1.78 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று ஈரோடு மேற்கில், 70,600 ரூபாய், பெருந்துறையில், 2 லட்சத்து, 96,800 ரூபாய், பவானியில், 66,260 ரூபாய், அந்தியூரில் ஒரு லட்சத்து, 35,600 ரூபாய் என, ஐந்து லட்சத்து, 59,260 ரூபாயை பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து இதுவரை, 1 கோடியே, 83 லட்சத்து, 88,070 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 77 லட்சத்து, 11,410 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். * ஈரோடு மேற்கு தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர், திண்டலில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கோவை நீலாம்பூர் மகாசக்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன், 37, காரில் வந்தார். சோதனை செய்தலில், 1.24 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
