ADDED : ஏப் 15, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை பிரிவினர், வேப்பம்பாளையம் பகுதியில் நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த குழந்தைவேலு மகன் ஸ்ரீதரன். பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி ஸ்விப்ட் காரில் சென்றார். காரை தேர்தல் அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணம் ஏதுமின்றி ரூ.57 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்தனர்.
