தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.5.87 லட்சம் பறிமுதல்

ரூ.5.87 லட்சம் பறிமுதல்

ரூ.5.87 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 23, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 78.12 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டி-ருந்தது.

நேற்று ஈரோடு கிழக்கில், 5.62 லட்சம் ரூபாய், ஈரோடு மேற்கு - 7 லட்சம் ரூபாய், அந்தியூர் - 3 லட்சத்து, 19,940 ரூபாய், கோபியில், 84,500 ரூபாய், பவானிசாகரில், 56,800 ரூபாய் என, 5.87 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். மொத்தம், 83.99 லட்சம் ரூபாய் பறிமுதலானதில், 66.39 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்கள் வழங்கியதால், திரும்ப ஒப்படைத்துள்ளனர்.* கோபி அருகே கொடிவேரி அணை பிரிவில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி மீனாட்சி சுந்தரம் தலைமையில், நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சத்தியமங்-கலம் அருகே பனையம்பள்ளியை சேர்ந்த சிவப்பிரகாஷ், காரில் வந்தார். உரிய ஆவணமில்லாததால், அவர் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாயை

பறிமுதல் செய்தனர்.

* கோபி அருகே ஏளூர் மேட்டில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது வந்த ஒரு லாரியில், கேரளா மாநிலம் மலப்பு-ரத்தை சேர்ந்த பாக்குவியாபாரி சைதலாவிம், உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 1.35 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us