தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.7.79 லட்சம் பறிமுதல்

ரூ.7.79 லட்சம் பறிமுதல்

ரூ.7.79 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 10, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை தேர்தல் பறக்கும் படையினர், 1.62 கோடி ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர். ஈரோடு கிழக்கில், 2 லட்சத்து, 66,800 ரூபாய், ஈரோடு மேற்கில், 3 லட்சத்து, 500 ரூபாய், மொடக்குறிச்சியில், 1 லட்சத்து, 47,000 ரூபாய், கோபியில், 65,000 ரூபாய் என, 7 லட்சத்து, 79,300 ரூபாயை நேற்று பறிமுதல் செய்திருந்தனர். இத்துடன் சேர்த்து, 1 கோடியே, 69 லட்சத்து, 86,210 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில், 1.64 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

காங்கேயம்: 15 பேர் போட்டிகாங்கேயம்: காங்கேயம் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 15 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் விபரம்: 1.என்.எஸ்.என்.நடராஜ் - அ.இ.அ.தி.மு.க.,- இரட்டை இலை. 2.சாமிநாதன் - தி.மு.க.,- உதயசூரியன். 3.கார்மேகன் -நாம் தமிழர்-விவசாயி. 4.திருஞானசம்பந்தம் - இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளுக்கான கட்சி - மடிகணினி. 5.த.வெ.க. - மணிகவுண்டர் - விசில். 6.இந்திய கண சங்கம் - விஜயலட்சுமி - வெண்டைகாய். சுயேட்சைகள்: 1.ஆறுமுகம்-கிரிக்கெட் பேட். 2.இம்மானுவேல் - தென்னந்தோப்பு. 3.கார்த்திகேயன்- - சிசிடிவி. 4.கௌதம் - டிஸ்ஆண்டனா. 5.நடராஜ் - மின்கம்பம். 6.பழனிச்சாமி - டெலிபோன். 7.பார்த்திபன் - பேனா முனை. 8.மணி - டிரம்பட் இசைக்கருவி. 9.ராஜேந்திரன் - மிக்ஸி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us