பவானி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை ரூ.86 ஆயிரம் பறிமுதல்
பவானி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை ரூ.86 ஆயிரம் பறிமுதல்
ADDED : ஜூன் 05, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
பவானி:ஈரோடு
மாவட்டம் பவானி சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை
டி.எஸ்.பி., சாந்தி தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார், சோதனைக்கு வந்தனர். இரவு, 9:00 மணிவரை
சோதனை நீடித்தது.
இதில் கணக்கில் வராத, 86 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சார்பதிவளார் (பொறுப்பு)
வைடூரியம், புரோக்கர்கள் ஹரிஹரன், தினேஷ் ஆகியோரை விசாரணைக்காக
நாளை (இன்று), ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்கு வரவும்
அறிவுறுத்தி சென்றனர்.
