/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி, பெருந்துறையில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
/
புளியம்பட்டி, பெருந்துறையில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
புளியம்பட்டி, பெருந்துறையில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
புளியம்பட்டி, பெருந்துறையில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : அக் 07, 2024 03:28 AM
புன்செய் புளியம்பட்டி: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தமிழகத்தில் நேற்று பேரணி நடத்தினர். அந்த வகையில் புன்செய்புளியம்பட்டியில் விஜயதசமியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., கொடியை ஏற்றி பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாதம்பாளையம் சாலை பகுதியில் இருந்து, ௩௦௦க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலம் துவங்கியது.
தொழிலதிபர் சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதி, பவானிசாகர் சாலை, கோவை சாலை வழியாக திரு.வி.க., திடலை அடைந்தது. திரு.வி.க.திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடை முன் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பயிற்சி
மேற்கொண்டனர். இதை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் ஊர்வலத்தை பார்வையிட்டனர். எஸ்.பி., ஜவகர் தலைமையில், 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெருந்துறையில்....
ஈரோடு மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சங்கம் சார்பில், பெருந்துறையில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பெருந்துறை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சாமிகள்
ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவடைந்தது. இதையடுத்து மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை செயலாளர் (உடற்பயிற்சி துறை) சக்திதாசன் பேசியதாவது:இந்துத்வா பெயரை கேட்டாலே, தமிழகத்துக்கு கசப்பாக உள்ளது. இந்து என்பது மதத்தின் அடையாளம் கிடையாது. வாழ்வியல் முறைக்கான தர்மத்தை சொல்கிறது. வாழ்க்கைக்கு அறம் முக்கியம். அதைத்தான்
இந்துத்வா சொல்கிறது. அனைவரும் இன்பமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளீர்... இதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. சதான தர்மத்தை
பரிகாசம் செய்தவர்கள், இருந்த இடம் இல்லாமல் காணமால் போய் விட்டார்கள். 1947ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ்., தேச விடுதலைக்காக பாடுபட்டது. அதன் பிறகு தேசத்தின் தேவைக்காக களத்தில் இறங்கி
பணியாற்றுகிறது. சமுதாய முன்னேற்றத்துக்கு யார் பணி செய்தாலும், ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட தலைவர் சந்திரசேகர், ஈரோடு நகர தலைவர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.