ADDED : மார் 17, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: சட்டசபை தேர்தல் பணி குறித்து, துறை ரீதியாக, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று காலை நடந்தது. வருவாய், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
* சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலாகியுள்ள நிலையில், தாராபுரத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில், மூன்று கண்காணிப்பு குழுக்கள், காலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை இயங்கும் ஒரு குழு என, நான்கு பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
