நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, சீனாபுரம் ஸ்பிரிங் மவுண்ட் வேலி பள்ளி சார்பில், மினி மாரத்தான் ஓட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது.
புது பஸ் ஸ்டாண்ட் அருகில் துவங்கிய ஓட்டத்தை, பெருந்துறை இன்ஸ்பெக்டர் தெய்வராணி, பெருந்துறை டிராபிக் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.

