/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உண்ணாவிரதம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உண்ணாவிரதம்
ADDED : டிச 31, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கிருஷ்ண-சாமி தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், உண்ணாவிரதம் இருந்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தின் பெயரை மாற்றியதுடன், திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை குறைந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், மசோதாவை திரும்ப பெறவும் வலியுறுத்தினர். நிதி குறைக்கப்பட்டால் நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும். முன்பு போலவே அத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினர்.

