/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2025 01:10 AM
ஈரோடு :தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள, 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர், ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் பஞ்.,களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்ட கணினி உதவியாளர், எஸ்.பி.எம்., திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.