நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில அமைப்பாளர் இல.கதிரேசன், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் முன்னிலை வகித்தனர். வரும், 2026 சட்டசபை தேர்தலில் கள்ளுக்கான தடையை விலக்கும் கட்சிக்கே மக்கள் ஓட்டுப்போட வேண்டும்.
வரும் சட்டசபை அறிவிப்புக்கு முன் கள்ளுக்கான தடையை நீக்கி அறிவித்தால், தி.மு.க.,வுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கள்ளுக்கான தடையை நீக்க அ.தி.மு.க., - தி.மு.க., - விஜய் போன்றோரும் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.