/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் சைவ சித்தாந்த பயிற்சி
/
சென்னிமலையில் சைவ சித்தாந்த பயிற்சி
ADDED : டிச 21, 2024 01:34 AM
சென்னிமலை, டிச. 21 -
திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம், 23வது குருமகா சந்நிதானம் சார்பாக, சைவ சித்தார்ந்த நேர்முக பயிற்சி வகுப்பு, 2025 ஜன., மாதம் முதல், மாதம் தோறும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை காலை, 10:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை, 24 பயிற்சி வகுப்பு இரண்டு ஆண்டு நடக்கவுள்ளது.
சென்னிமலை ஈஸ்வரன் கோவில் முன்புள்ள பூந்துறை நாட்டு காடை குல மடத்தில் பயிற்சி நடக்கிறது. இதில், 15 வயதுக்கு மேற்பட்ட தமிழ் எழுத, படிக்க தெரிந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுவும் இல்லை. கலந்து கொள்ள விரும்புவோர், 97880-90653 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். இத்தகவலை பயிற்சி மையம் சார்பாக, பயிற்சி மைய அமைப்பாளர் மகேஷ் குருக்கள் தெரிவித்துள்ளார்.