தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளர் கரங்களில் சம்பள உயர்வு பட்டியல்

தொழிலாளர் கரங்களில் சம்பள உயர்வு பட்டியல்

தொழிலாளர் கரங்களில் சம்பள உயர்வு பட்டியல்


ADDED : ஏப் 28, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம் பகுதி பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கடந்த ஒப்பந்தம் கடந்த டிச. 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றதை அடுத்து, தொழிலாளர் துறை அதிகாரி தலைமையில் புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. சம்பள உயர்வு: புதிய ஒப்பந்தத்தின்படி, எவர்சில்வர் பாத்திரங்கள்: 16 சதவீத உயர்வு. பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்கள்: 23 சதவீத உயர்வு. ஈயப் பூச்சு பாத்திரங்கள்: 30 சதவீத உயர்வு. மகாசபை கூடியது: ஒப்பந்த விபரங்களைத் தொழிலாளர்களுக்கு விளக்கும் வகையில், அனைத்து பாத்திர தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி சார்பில் அனுப்பர்பாளையத்தில் நேற்று காலை மகாசபை கூட்டம் நடைந்தது.

இதில் தொழிலாளர்கள் அனைவருக்கும் புதிய ஊதிய உயர்வு பட்டியல் வழங்கப்பட்டது. இந்த பட்டியலின்படி கூலியைப் பெற்றுக்கொள்ள, தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பாத்திர தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us