* ஈரோடு மாவட்டம் பவானி அருகே மைலம்பாடி ஒழுங்கு-முறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 274 மூட்டை எள் வரத்தானது. வெள்ளை எள் கிலோ, 115.09 - 14௨ ரூபாய்; சிகப்பு எள், 11௬- 142.19 ரூபாய், கருப்பு எள், 11௪ - 186.69 ரூபாய் என, 30.97 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் தேங்காய் பருப்பு, தேங்காய், மக்காச்சோளம், உளுந்து, தட்டப்பயிறு வரத்தானது. அனைத்து விளைபொருட்-களும், 31.11 லட்சம்
ரூபாய்க்கு விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ முல்லை பூ,1,480 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை, 1,225, காக்கடா, 900, செண்டுமல்லி, 97, கோழிகொண்டை,85 , கனகாம்பரம்,600, சம்பங்கி,160, அரளி,120, துளசி,50, செவ்-வந்தி,280 ரூபாய்க்கும் ஏலம் போனது.* அந்தியூரில் நேற்று முன்தினம், நேற்று கால்நடை சந்தை நடந்-தது. இரண்டு நாள் சந்தையில் மொத்தம், ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. ஜெர்சி, மலை மாடு ஒன்று, 47 ஆயிரம் ரூபாய் வரை, எருமை, 49 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. ஒரு ஜோடி காங்கேயம் காளை, 1.30 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் முருங்கை கொள்-முதல் நிலையத்துக்கு, 20 டன் முருங்கை நேற்று வரத்தானது. செடி முருங்கை, மர முருங்கை கிலோ, 3 ரூபாய், கருப்பு முருங்கை, 10 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த சில வாரங்க-ளாக வரத்து அதிகமானதால் விலை குறைந்ததாக
வியாபாரிகள் தெரிவித்தனர்.