ADDED : ஆக 16, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமபந்தி பொது விருந்து நடந்தது. காலை 6:00 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. காங்கேயம், திருப்பூர், சென்னிமலை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கோவிலில் குவிந்தனர்.
மதியம், 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து ஜாதி, சமய வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் பங்கேற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பொது விருந்து நடந்தது. கோவில் துணை ஆணையர் நந்தகுமார், ஒன்றிய செயலாளர் சிவானந்தன், நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன், ஆர்.ஐ. விதுர்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா உள்பட, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.