தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 10, 2024 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2024 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகே சத்தி---அத்தாணி சாலை ஏழூர் மேடு பிரிவில், அரக்கன்கோட்டை வி.ஏ.ஓ., மற்றும் பங்களாப்புதுார் போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.

பதிவெண் இல்லாத டிராக்டரில் மணல் ஏற்றி வரப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்ப முயன்றார்.

அவரை பிடித்து விசாரித்ததில், அரக்கன்கோட்டை, ஏழூர், கருப்பணகவுண்டர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, 54, என்பது தெரிந்தது. டிராக்டரில் ஒரு யூனிட் மணல் இருந்தது, அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து திருடி வந்ததாக கூறினார். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us