/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருமண மண்டப வளாகத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல்
/
திருமண மண்டப வளாகத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல்
ADDED : ஜன 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம் பட்டியில் திருமண மண்டபத்தில் புகுந்து, சந்-தன மரம் கடத்தப்பட்டது.
புன்செய்புளியம்பட்டியில், பவானிசாகர் சாலையில் தனியார் திரு-மண மண்டபம் உள்ளது. மண்டப வளாகத்தில் இரண்டு சந்தன மரங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. உரிமையாளர் ஜகிருன், 67. நேற்று முன் தினம் வழக்கம்போல்
மண்டபத்தை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது ஒரு சந்தன மரம் அடியோடு வெட்டி கடத்தப்பட்டது தெரிந்தது. புகாரின்படி புன்செய்புளியம்-பட்டி போலீசார் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது யார் என விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

