தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்று வழங்கும் திட்டம் தொடக்கம்

ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்று வழங்கும் திட்டம் தொடக்கம்

ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்று வழங்கும் திட்டம் தொடக்கம்


ADDED : அக் 21, 2024 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை மரங்கள் நிறைந்த பசுமையான பகுதியாக மாற்றும் முயற்சியில், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை, அனைத்து சமூக நல அறக்கட்டளை மற்றும் சங்கங்களுடனும் இணைந்து செயல்படுத்தியுள்ளது.

திட்டத்தின் தொடக்க விழா நத்தக்காடையூரில், பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தது. தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, 2,500 மரக்கன்றுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் சுரேஷ் பாபு, கல்லுாரி தலைவர் ராமலிங்கம், பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 3 லட்சம் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ-, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும். மரக்கன்று வளர்க்க விரும்புவோருக்கும் இலவசமாக வழங்கப்படும். வடகிழக்கு பருவமழை முடியும் முன், 10 லட்சம் மரக்கன்று நடப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us