/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை வட்டாரத்தில்சப்போட்டா அறுவடை துவக்கம்
/
சென்னிமலை வட்டாரத்தில்சப்போட்டா அறுவடை துவக்கம்
ADDED : ஏப் 23, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:-சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் மானவாரியாக, 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சப்போட்டா பழம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை துவங்கியுள்ளது. விவசாயிகளிடம் பழங்களை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால், விவசாயிகளே நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சில்லறை விலையில் கிலோ, 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர். நேரடி விற்பனையால் நல்ல விலை கிடைப்பதாக
விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

