/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி அதிரடிப்படை கேம்ப் போலீஸ் ஏட்டு தற்கொலை
/
சத்தி அதிரடிப்படை கேம்ப் போலீஸ் ஏட்டு தற்கொலை
ADDED : செப் 24, 2024 02:56 AM
சத்தியமங்கலம்: கரூர் மாவட்டம் புகளூர், பங்களாநகரை சேர்ந்தவர் அருள் குமார், 46; சத்தியமங்கலம் எஸ்.டி.எப்., கேம்ப்பில் தலைமை காவலராக, 2006 முதல் பணியாற்றி வந்தார். வீட்டை விஸ்தரிப்பு செய்ய வங்கியில், 30 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தவணை கட்டி வந்தார்.
ஆனாலும், கடனை கட்ட முடியுமா? என்ற சந்தேகத்தில், அவ்வப்போது மனைவி கிருத்திகாவிடம் புலம்பியுள்ளார். புகளூரில் மனைவி மற்றும் இரு குழந்தைகள் வசிக்கின்றனர். கடந்த, 21ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், மனைவியுடன் கடன் குறித்து விவாதித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், படுக்கை அறை மின்
விசிறியில், அருள்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

