ADDED : மார் 02, 2024 03:37 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தினர், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமஜெயம், செயலாளர் துரைசாமி, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மருத்துவ சமுதாயத்திற்கு இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நியமன ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெரு நிறுவனங்களால் சவர தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

