/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளி தற்கொலையில் எஸ்.சி.,-எஸ்.டி., விசாரணை
/
தொழிலாளி தற்கொலையில் எஸ்.சி.,-எஸ்.டி., விசாரணை
ADDED : ஜூலை 12, 2025 01:32 AM
தாராபுரம் :தாராபுரம் அருகே தொழிலாளி தற்கொலை சம்பவத்தில் தொடர்பாக, எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
தாராபுரத்தை அடுத்த சென்னாக்கல்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மாதம், 26ல் தான் வழக்கமாக ஆடு மேய்க்கும் பகுதியில் ஒரு மரத்தில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். புகாரின்பேரில் அலங்கியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். முருகனின் இரு கைகளும் முன்புறமாக கயிற்றால் சுற்றப்பட்டிருந்தது. இதனால் அவரை கொலை செய்து துாக்கில் தொங்க விட்டதாக, தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தமிழக எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய உறுப்பினர்கள், முருகன் மனைவி மணிமேகலை யிடம் நேற்று விசாரணை செய்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், 'என் கணவர் சாவில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உடல்நிலை முடியாததால், அப்படி செய்து கொண்டார்' என்றார்.
* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 147 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 253.90 முதல், 26௬ ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 177.11 முதல், 253.90 ரூபாய் வரை, 4,152 கிலோ கொப்பரை, 10.௬௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-240, காக்கடா-150, செண்டுமல்லி-90, கோழி கொண்டை- 90, ஜாதி முல்லை-600, கனகாம்பரம்-400, சம்பங்கி-௧00, அரளி-80, துளசி-60, செவ்வந்தி- 240 ரூபாய்க்கும் விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், குறைந்த விலை (கிலோ) மற்றும் சராசரி விலையாக, 63 ரூபாய், அதிகபட்சமாக 64 ரூபாய்க்கும் ஏலம் போனது. வரத்தான, 2,178 கிலோ தேங்காய், 1.38 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 15 ரூபாய், பெரியது ஒரு கட்டு, 50 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 25 முதல் 30 ரூபாய், செங்காம்பு வெற்றிலை, 5 முதல் 15 ரூபாய்க்கும் விற்பனையானது.
* பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,993 தேங்காய் வரத்தாகி, ஒரு காய், 23.50-32.10 ரூபாய் வரை, 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த சூரியகாந்தி விதை ஏலத்துக்கு, 32 ஆயிரம் கிலோ வரத்தானது. ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சம், 61.09 ரூபாய்; குறைந்தபட்சம், 52.89 ரூபாய் என, 19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.