ADDED : மே 17, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கினாங்கோம்பையை சேர்ந்தவர் பொங்கியண்ணன். தனியார் மில் தொழிலாளி. இவரின் மகன் யோகேஷ், 12; அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
பவானி ஆற்றில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கினான். அப்பகுதியினர் பார்த்து சிறுவனை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
