ADDED : செப் 17, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம், தம்மரெட்டிபாளையம் பஞ்., ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 35; டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகன் கோகுல் சங்கர், 12; பரஞ்சேர்வழி அருகே தனியார் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன். இரண்டு நாட்களாக உடல்நிலை பாதித்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது காலாண்டு தேர்வு நடக்கிறது. மதியம்தான் தேர்வு என்பதால் காலையில் படித்து கொண்டிருந்தார். தண்ணீர் குடித்த நிலையில் வாந்தி எடுத்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சாவடிபாளையத்தில் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குளுக்கோஸ் ஏற்றிய நிலையில், காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.