/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 15, 2025 12:56 AM
ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் ஈரோடு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடந்தது.
மேல்நிலைப்பள்ளிக்கான கட்டுரை போட்டியில், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - தமிழ்செல்வி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி - நித்திகா, வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி - உமகமது மஜித் முறையே முதல் மூன்று பரிசுக்கான தொகை, 10,000, 7,000, 5,000 ரூபாய் வென்றனர்.
பேச்சுப்போட்டியில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோபிகா, தாசப்பகவுண்டன்புதுார் பிரேம்குமார், பெருந்துறை மாவட்ட அரசு மாதிரி பள்ளி கனிஷ்கா முதல் மூன்று பரிசுக்கான ரொக்கப்பணத்தை பெற்றனர்.
கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலக இரணடாம் தள கூட்டரங்கில் இன்று நடக்கவுள்ளது.